ஐ.பி.எல் 2025 : மும்பை அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல் 2025 : மும்பை அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

நடப்பு ஐபிஎல் சீசனில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்ப்பட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது

சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய முதலில் மும்பை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் களமிறங்கினர்.

முதல் ஓவரில் கலீல் அகமது வீசிய பந்தில் ஓட்டங்கள் ஏதும் ஏதும் எடுக்காமல் ரோஹித் ஆட்டமிழந்தார்.

தொடர்நது மூன்றாவது ஓவரில் கலீல் அகமது பந்து வீச்சில் ரியான் ரிக்கல்டன் 13 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய வில் ஜேக்ஸ் 11 பெற்று அஸ்வினின் பந்து வீசி ஆட்டமிழந்தார்

சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் மும்பை அணி 4.3 ஆவது ஓவரில் 36 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது

அதன் பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி 51 ஓட்டங்களை பெற்றது.

நூர் அகமதின் பந்துவீச்சு தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங் சூர்யகுமார் யாதவை 29 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்தது.

அதனை தொடர்ந்து நூர் அகமதின் பந்து வீச்சில் ராபின் மின்ஸ் மற்றும் திலக் வர்மா ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்த ஓவர்களில் நமன் 17 ஓட்டங்களையும் , சான்ட்னர் 11 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய தீபக் சஹார் 15 பந்துகளில் 28 ஓட்டங்களை எடுத்தார்

சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்கள் நிறைவில் மும்பை அணி 9 விக்கட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை பதிவுசெய்தது.

தொடர்ந்து 156 என்ற வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரச்சின் ரவீந்திரா மற்றும் ராகுல் திரிபாதி களமிறங்கினர்.

ராகுல் திரிபாதி 2 ஓட்டங்களை பெற்று தீபக் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய அணி தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் 53 ஓட்டங்களை பதிவு செய்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் டூபே 9 ஓட்டங்களும் , தீபக் ஹூடா 3 ஓட்டங்களும் , சாம் கர்ரன் 4 ஓட்டங்களும் , ரவீந்திர ஜடேஜா 17 ஓட்டங்களும் பதிவு செய்தனர்.

அடுத்தபடியாக அரங்கம் அதிர தோனி களமிறங்கினாலும் ரன்கள் எதுவும் அவர் எடுக்கவில்லை.

6 பந்துகளுக்கு 4 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இறுதியாக ஒரு சிக்சரை அடித்து போட்டியை நிறைவிற்கு கொண்டுவந்தார் ரச்சின் ரவீந்திரா.

அதற்கமைய மும்பை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )