பேச்சு சுதந்திரத்திற்கும் இன்று வரையறை விதிக்கப்பட்டுள்ளது

பேச்சு சுதந்திரத்திற்கும் இன்று வரையறை விதிக்கப்பட்டுள்ளது

அரசாங்கத்தின் சில பாரதூரமான பேச்சுக்கள் ஜனநாயகத்தின் அழிவை சுட்டி நிற்கின்றன. அடிப்படை மனித உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்தையும் மீறுவதையும் இது எடுத்துக்காட்டுகின்றன.

ஆளுந்தரப்பு உறுப்பினர்களின் அபிப்பிராயத்திற்கு ஏற்ப சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கப்படும் 15% வட்டிச் சலுகை, வேலையில்லாப் பட்டதாரிகளுக்காக குரல் எழுப்புவது, அதிபர்- ஆசிரியர் சம்பளம் முரண்பாடு குறித்து பேசுவது, சூரிய சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்து பேசுவது, டீசல் மாபியாவை விமர்சிப்பதும் எதிர்ப்பதும், பொது பாதுகாப்பு குறித்து பேசுவதும், நாட்டில் மேலேழுந்து வரும் கொலைக் கலாசாரம் குறித்து பேசுவதும் சிறைக்குச் செல்ல ஒரு காரணமாக இருந்து வருகிறது. இதற்கு நாம் இடமளியோம்.

கருத்துச் சுதந்திரத்திற்கும் பேச்சுச் சுதந்திரத்திற்கும் எவ்வகையிலும் யாராலும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது. இது ஜனநாயகம் அல்ல. இவ்வாறு எமது வாயை மூட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

குண்டசாலை தேர்தல் தொகுதியில் நேற்று (30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )