
முன்னாள் ஜனாதிபதி அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கை
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இராணுவம் உட்பட மருத்துவக் குழுவை மியன்மாருக்கு அனுப்புமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி,
மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதாகவும், அந்த நாட்டில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்க மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்களை அனுப்புமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் ரணில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
”2015ஆம் ஆண்டு நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, நாங்கள் இராணுவக் குழுவை அனுப்பினோம், இந்தியாவிற்குப் பிறகு இலங்கை இரண்டாவது பெரிய நன்கொடையாளராக இருந்தது.
இன்று, இந்தியா, தாய்லாந்து, மலேசியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியா கூட மியான்மருக்கு உதவ உதவிகளை அனுப்பியுள்ளன அதனால் நாமும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இராணுவ மருத்துவப் படையைச் சேர்ந்த மருத்துவர்கள் உட்பட ஒரு குழுவை உடனடியாக மியன்மாருக்கு அனுப்பி, அவர்களுக்கு உபகரணங்களை வழங்கி, மியன்மாரில் ஒரு தற்காலிக மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்பதே எனது முன்மொழிவு” என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.