
களுத்துறையில் காணியிலிருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு,குண்டுகளை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை
யுத்த காலத்தில் பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்ட மோட்டார் குண்டுகள் சில காணி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை சென்ட்ரல் சந்தி, பராக்கிரம மாவத்தையில் அமைந்துள்ள ஒரு காணியில் உடற்பயிற்சி மையம் (Gym) அமைப்பதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்ட போது 3 மோட்டார் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அந்த இடத்தில் மேலும் குண்டுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது குழிக்குள் சேற்று நீர் நிறைந்துள்ளதால், விசேட அதிரடிப்படையினரை (STF) வரவழைத்து அவற்றை செயலிழக்கச் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

