
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று (04) கைது செய்யப்பட்ட இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உட்பட நால்வரும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டில், இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்திற்குத் தேவையற்ற நேரத்தில், கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல், ஒரு மணி நேரத்திற்கு 2,000 கிலோ மீன்களை பொதி செய்யக்கூடிய உயர் திறன் கொண்ட மீன் பொதியிடல் இயந்திரத்தை கொள்வனவு செய்தமை தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
CATEGORIES Sri Lanka

