இராஜகிரியாவில் சுற்றிவளைப்பு ; 120 வெளிநாட்டவர்கள் கைது

இராஜகிரியாவில் சுற்றிவளைப்பு ; 120 வெளிநாட்டவர்கள் கைது

இராஜகிரிய பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், சீனா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 120 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியமை மற்றும் இணையக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )