
கன மழையால் காலியில் பல வீதிகள் நீரில் மூழ்கின
காலி நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது .
நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழையால் ,
காலி – வக்வெல்ல பிரதான வீதி , காலி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதிப்பகுதி ,
காலி – பத்தேகம மாபலகம பிரதான வீதி ,
தலப்பிட்டி, சரேந்துகடே மற்றும் தனிபொல்கஹா சந்தி பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது .
இதேவேளை, காலி நகரின் பல குறுக்கு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சில வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வடிகால் அமைப்புகளை முறையாக சுத்தம் செய்யாமை , மழைநீர் பாயும் பிரதான வடிகால்கல் பகுதியில் முறையற்ற வகையில் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இவ்வாறு வெள்ளம் தேங்குவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .
CATEGORIES Sri Lanka

