
காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு
வெள்ளவனி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 55 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண், வீட்டை விட்டு வெளியே வந்திருந்த சந்தர்ப்பத்தில் யானை தாக்கியதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துக்குப் பின்னர் அப்பகுதி மக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வெள்ளவனிடவுட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

