
ஆசிய ஈட்டி எறிதல் போட்டியில் சுமேத ரணசிங்கவிற்கு வெள்ளிப் பதக்கம்
தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் சுமேதா ரணசிங்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 75.61 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்தப் பிரிவில் உஸ்பெகிஸ்தானின் சர்வர் இஸ்மாயிலோவ் 77.39 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
ஆசிய ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று (02) தென் கொரியாவில் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

