இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை ; பல பகுதிகளில் மின்னல் அபாயம்

இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை ; பல பகுதிகளில் மின்னல் அபாயம்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, வடமத்திய, மத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், பதுளை, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னல் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறான காலநிலையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இடியுடன் கூடிய மழை நேரங்களில் வெளிப்புறச் செயல்பாடுகளைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )