
பணிஸ் துண்டு தொண்டையில் சிக்கி முதியவர் ஒருவர் பலி
பணிஸ் துண்டு தொண்டையில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஹோமாகமயில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியை சேர்ந்த 72 வயதான நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ தினத்தன்று குறித்த முதியவர் பணிஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பணிஸ் துண்டொன்று அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டுள்ளது. பின்னர், குடும்பத்தினர் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் சாப்பிட்ட பணிஸின் ஒரு துண்டு நுரையீரலுக்குள் சென்று சிக்கியதால் ஏற்பட்ட சுவாசக் கோளாறே மரணத்திற்கு காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
CATEGORIES Sri Lanka

