
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க மால்டா முடிவு
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க போவதாக மால்டா அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மால்டா வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் கிறிஸ்டோபர் கட்டஜார் :-
“பாலஸ்தீன மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை மால்டா நீண்ட காலமாக ஆதரித்து வருகிறது. இரு நாடு தீர்வு என்ற கருத்தை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
இதனால் செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதற்கான கொள்கைரீதியான முடிவை மால்டா அரசாங்கம் எடுத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நீடித்து வரும் நிலையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரான்ஸ், இங்கிலாந்து அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES World News

