
கெஹெலியவின் வீட்டில் பணிபுரிந்த பெண் கைது
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இல்லத்தில் பணியாற்றிய பணிப்பெண் ஒருவர் நேற்று (11) இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

