
பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு
எரிபொருள் விலையில் நேற்று (02) மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை திருத்துவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்படும் நட்டத்தை தற்போது பேருந்து உரிமையாளர்களே சுமக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.
“தற்போது டீசல் விலை 10 ரூபாயால் உயர்த்தப்பட்டிருந்தாலும், இச்சூழலில் உடனடியாக கட்டண திருத்தம் கோருவதற்கு பேருந்து உரிமையாளர்களுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை,” என அவர் விளக்கினார்.

