நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

நாட்டில் எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியதில்லை என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (17) அமைச்சரவை முடிவை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் “நாட்டில் போதியளவு எண்ணெய் இருப்பு உள்ளது. யாரும் அதைப் பற்றி பயப்பட வேண்டாம். இரண்டரை மாதங்களுக்கு போதுமான எண்ணெய் இருப்பு எங்களிடம் உள்ளது.

அதன்படி, ஒரு லட்சத்து அறுபதாயிரம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களில் மேலும் தொண்ணூறு மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் பெறப்படும்.

நீண்ட கால ஒப்பந்தங்களின் கீழ் மேலும் நான்கு கச்சா எண்ணெய் டேங்கர்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. விரைவில் இந்த ஆர்டர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே யாரும் பயப்பட வேண்டாம். தேவையில்லாமல் எண்ணெயை எடுத்து வீட்டில் சேமிக்க வேண்டாம். தேவையான எண்ணெய் இருப்பை வழங்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.” என தெரிவித்தார்.

இந்நிலையில், எரிசக்தி அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு, நாட்டில் எண்ணெய் பற்றாக்குறை இருப்பதாக போலி செய்திகளால் ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )