
முல்லைத்தீவு கல்லிஅடி கால்வாய் திட்டம் தொடர்பான கண்காணிப்பு விஜயம்
முல்லைத்தீவு நந்திக்கடால் களப்பை அண்டிய பகுதியில் கல்லிஅடி கால்வாய் மற்றும் அதனை சூழவுள்ள பகுதியில் மேற்கொள்ளப்படும் ஏழு புதிய அணைக்கட்டுகள் நிர்மாணிக்கப்பட்டமை தொடர்பாக விசேட மேற்பார்வை விஜயம் ஒன்று காணி மற்றும் நீர்ப்பாசனப் பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்கவின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது திட்டத்தின் தற்போதைய நிருமாணப் பணிகளின் நிலைமைகள் மற்றும் கட்டுமாணத்தில் காணப்படும் முன்னேற்றம், தொழில்நுட்ப பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு முறைமைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு பிரதி அமைச்சர் திட்டத்தை பொறுப்பேற்றுள்ள பொறியியலாளர்களுடன் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், திட்டத்தின் எதிர்கால நிகழ்வுகள், வினைத்திறன் மற்றும் குறிப்பிட்ட கால எல்லை தொடர்பாக அதிக கவனம் செலுத்தினார்.
இத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாயத் துறை மற்றும் நீர்வள முகாமைத்துவத்தை மேலும் வினைத் திறனாக மேற்கொள்வதன் ஊடாக சிறந்த பங்களிப்பை வழங்கவுள்ளது.

