இரண்டாமிடத்துக்கு முன்னேறிய ரஷீட் கான்

இரண்டாமிடத்துக்கு முன்னேறிய ரஷீட் கான்

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் முன்னேறியுள்ளார்.

பங்களாதேஷுக்கெதிரான முதலிரண்டு இருபதுக்கு – 20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே எட்டாமிடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. வருண் சக்கரவர்த்தி, 2. ரஷீட் கான், 3. அகீல் ஹொஸைன், 4. அடில் ரஷீட், 5. ஜேக்கப் டஃபி, 6. அடம் ஸாம்பா, 7. அப்ரார் அஹ்மட், 8. வனிது ஹசரங்க, 9. நுவான் துஷார, 10. சுஃபியான் முக்கீம்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )