எம்மிடம் எரிவாயு, எரிபொருள் வளங்கள் காணப்பட்டாலும், பல்வேறு தரப்பினரின் அழுத்தங்கள் காரணமாக அவற்றை பெற்றுக் கொள்ள முடியாத நிலை

எம்மிடம் எரிவாயு, எரிபொருள் வளங்கள் காணப்பட்டாலும், பல்வேறு தரப்பினரின் அழுத்தங்கள் காரணமாக அவற்றை பெற்றுக் கொள்ள முடியாத நிலை

நாடாக கடந்த 7 ஆண்டுகளில் 5 துயர்நிறைந்த சம்பவங்களை நாம் எதிர்கொண்டோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் மத்திய கிழக்கு போர் வரையிலான இந்த சோகங்கள் காரணமாக நமது நாடு பல பாரதூரமான சவால்களையும் பெரும் ஆபத்துகளையும் எதிர்கொண்டு வருகின்றன.

நமது நாடு இப்போது மிகவும் பாரதூரமான அபாயகரமான நிலைமைகளை எதிர்கொண்டுள்ளன. உணவுப் பாதுகாப்பு, பொருளாதார, சமூக, அரசியல் இறையாண்மை மற்றும் மக்களின் வாழ்க்கை முறை, அபிவிருத்தி நடைமுறைகள் என அனைத்தும் பெரும் ஆபத்தான நிலைமைகளை எதிர்கொள்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பல சவால்களும் ஆபத்துகளும் காணப்படும் நமது நாட்டில் வழக்கமான கோட்பாடுகளுக்கும் வழக்கமான கருத்துகளுக்கும் தத்துவங்களுக்கும் அடைபட்டுக்கொள்ளாமல், இந்த சவால்களுக்கும் ஆபத்தான நிலைமைகளுக்கும் நடைமுறை ரீதியிலான தீர்வுகளைத் தேட வேண்டும்.

நமது நாட்டில் இன்று உணவுப் பாதுகாப்பிற்கு பதிலாக உணவு பாதுகாப்பற்ற நிலையே மேலெழுந்து காணப்படுகின்றன. நமது நாட்டின் காய்கறிகள், பழங்கள், விளைபொருட்களை பயன்படுத்தி உணவு உட்பட ஏனைய தேவைகளை அடைய வேண்டிய வழிமுறைகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கலாநிதி சந்திமா விஜய குணவர்தன அவர்களால் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா நேற்று கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இந்த கருத்துகளுக்கு மாறான கருத்துகளை முன்னிலைப்படுத்தும் தீவிர வலதுசாரி, நவ தாராளவாத கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, உள்நாட்டு வளங்களை ஒதுக்கி ஏகாதிபத்திய கருத்துகளை தூக்கிப் பிடிக்கும் குழுக்கள் நமது நாட்டில் இருக்கின்றன.

அவர்கள் நமது நாட்டின் கலாச்சாரத்தையும் நாகரிகத்தையும் வேண்டுமென்றே சீரழித்து, நாட்டிற்குப் பொருந்தாத கருத்துகளை நாட்டிற்குள் நிலைநிறுத்தி, நாட்டின் மேன்மையை கெடுக்க சூழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே இவர்களின் பிடியில் சிக்கி, இவர்களுக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த தருணத்தில் நாட்டின் தேவையை, மக்களின் தேவையை பற்றிச் சிந்தித்து, நமது நாட்டின் வளங்களைப் பயன்படுத்தி சொந்த முயற்சியால் அனைத்து வழிகளிலும் தன்னிறைவான நிலையை அடைய முயற்சிக்க வேண்டும். நமது கடலோரங்களில் காணப்படும் எரிவாயு படிமங்கள் மற்றும் எரிபொருள் வளங்கள் பற்றி பேசப்படுகின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியின் வலுச்சக்தி ஆற்றல் சார் கொள்கை வகுப்புக் குழு அண்மையில் கூடிய சமயம் அங்கிருந்த நிபுணர்களிடம் இது தொடர்பில் கேட்ட போது, பல்வேறு தரப்பினரின் அழுத்தங்கள் காரணமாக இந்த வளங்களை பெற முடியாத நிலை காணப்படுகின்றன, பாதுகாப்பிற்கும் எரிபொருள் பாதுகாப்பிற்கும் எதிராக நடந்து கொள்ளும் சிலரின் செயற்பாடுகள் காரணமாக இந்த வளங்களை பெற முடியாத நிலை எமக்கு காணப்படுகின்றன என்று தெரிவித்தனர் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு குறிப்பிட்டார்.

இந்த வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதன் மூலம் எப்போதுமே வெளிநாடுகளை நாம் நம்பியிராமல், சொந்தமாக எமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும், உணவுப் பாதுகாப்பு தொடர்பாகவும் இந்த பிரச்சினைகள் காணப்படுகின்றன, இந்த நூலின் மூலம் நமது நாட்டிற்கு பல படிப்பினைகளை கற்றுக்கொள்ள முடியும், நமது கலாச்சாரத்தின் முக்கியத்துவம் ஆகியவை இந்நூலில் சிறப்பாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

மக்களை வாழ வைக்க நமது நாட்டிலிருந்தே செய்து கொள்ள முடியுமான அதாவது உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளுக்கும் இந்த நூலில் பதில்கள் வழங்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )