இஸ்ரேலின் தடுப்பு அமைப்பையும் மீறி தாக்கியளிக்கும் ஹிஸ்புல்லாவின் அதி நவீன ‘ஃபைபர் ஆப்டிக்’ ட்ரோன்

இஸ்ரேலின் தடுப்பு அமைப்பையும் மீறி தாக்கியளிக்கும் ஹிஸ்புல்லாவின் அதி நவீன ‘ஃபைபர் ஆப்டிக்’ ட்ரோன்

இஸ்ரேலின் தடுப்பு அமைப்பையும் மீறி தாக்கியளிக்கும்
ஹிஸ்புல்லாவின் அதி நவீன ‘ஃபைபர் ஆப்டிக்’ ட்ரோன்

இஸ்ரேலின் அதிநவீன மின்னணுத் தடுப்பு அமைப்புகளையும் மீறிச் செயல்படக்கூடிய புதிய வகை ட்ரோன் ஒன்றை ஹிஸ்புல்லா தற்போது பயன்படுத்தி வருகிறது.

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய பேஜர் (Pager) வெடிப்புத் தாக்குதல் நடந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், தற்போது ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராகப் புதிய வகை ட்ரோன் (Drone) தாக்குதலை மேற்கொண்டுள்ளது

வழக்கமான ட்ரோன்கள் கம்பியில்லா சிக்னல்கள் மூலம் இயக்கப்படும்.

ஆனால், இந்த ‘குவாட்காப்டர்’ (Quadcopter) வகை ட்ரோன்கள் ஒரு மெல்லிய ஃபைபர் ஆப்டிக் கேபிள் (நார் இழை ) மூலம் அதனை இயக்குபவருடன் இணைக்கப்பட்டுள்ளன.

ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படாததால், இஸ்ரேலின்பாதுகாப்பு தடுப்புக் கருவிகளால் இதனைத் தடுக்க முடியாது.

இது மின்னணு அடையாளங்களை (Electronic signature) வெளிப்படுத்தாது என்பதால், இந்த ட்ரோன் எங்கிருந்து ஏவப்பட்டது என்பதைக் கண்டுபிடிப்பதும் இஸ்ரேலிய இராணுவத்திற்குச் சாத்தியமற்றதாக உள்ளது.

சமீபத்தில் ஹிஸ்புல்லா வெளியிட்ட வீடியோ ஒன்றில், இந்த ட்ரோன் இஸ்ரேலிய வீரர்களைத் தாக்குவது பதிவாகியுள்ளது.

இந்தத் தாக்குதலில் 19 வயதான இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய் ஈடான் ஃபூக்ஸ் (Sergeant Idan Fooks) கொல்லப்பட்டதை இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், காயமடைந்தவர்களை மீட்க வந்த ஹெலிகாப்டர் மீதும் ஹிஸ்புல்லா மேலதிக ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் யெஹோசுவா காலிஸ்கி இது குறித்துக் கூறுகையில், இந்த ட்ரோன்கள் தகவல் தொடர்புத் தடையால் பாதிக்கப்படாதவை மற்றும் அவற்றைக் கண்டறிவது மிகவும் கடினம் எனத் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )