
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 918 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (02) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 918 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 08 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய 03 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 925 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து 01 கிலோகிராம் 836 கிராம் ஹெரோயின், 02 கிலோகிராம் 448 கிராம் ஐஸ், 196 கிலோகிராம் 155 கிராம் கஞ்சா, 18,359 கஞ்சா செடிகள், 01 கிலோகிராம் 346 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 798 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 5,461 போதை மாத்திரைகள், 128 கிராம் மதனமோதகம் மற்றும் 500 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

