
யாழில் கைதான சட்டத்தரணிக்கு பிணை
யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணியை 10 இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் காணி ஒன்றின் உறுதி எழுதியதில் மோசடி இடம்பெற்றமை தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் குறித்த காணியின் உறுதி முடிப்பை நிறைவேற்றிய சட்டத்தரணி நேற்று (06) கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை விசாரணைகளின் பின்னர் , பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் முன்னிலையில் முற்படுத்திய வேளை , கைதான சட்டத்தரணியை 10 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம் , வெளிநாட்டு பயண தடையை விதித்துள்ளது.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

