பிரகீத் எக்னலிகொட வழக்கை விசாரிக்க நிரந்தர நீதாய நீதிமன்றதில்               3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

பிரகீத் எக்னலிகொட வழக்கை விசாரிக்க நிரந்தர நீதாய நீதிமன்றதில் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவினால் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் (Trial-at-Bar) நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நீதாய மேல் நீதிமன்றத்தில் நயனா செனவிரத்ன ,நளின் ஹேவாவசம் ,லக்மாலி ஹேவாவசம் ஆகிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர்:

பிரகீத் எக்னலிகொட 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி இரவு கடத்தப்பட்டார்.

இச்சம்பவம் இடம்பெற்று 16 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அவர் உயிரிழந்தமை குறித்து இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )