
ராஜகிரியாவில் கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டவர்களுக்கு விளக்கமறியல்
ராஜகிரிய பகுதியில் நேற்று (03) கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டவர்கள் மே 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அளுத்கடை நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.
ராஜகிரிய – மெதவெளிகட பகுதியில் தங்கியிருந்த இந்த வெளிநாட்டவர்கள் நேற்று பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன.
CATEGORIES Sri Lanka

