
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து உதவும் – விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக முன்னிலை பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து உதவும் என்று அவர் கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக முன்னிலை பெற்றுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள விஜய்க்கு பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- தவெகவின் ஈர்க்கக்கூடிய செயல்திறனுக்கு எனது பாராட்டுகள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து உதவும். தேசிய ஜனநயக கூட்டணிக்கு ஆதரவளித்த வாக்காளர்களுக்கு நன்றி. தமிழக முன்னேற்றம், மக்கள் நலனுக்கு உதவிகளை மத்திய அரசு தொடரும்” என்று பதிவிட்டுள்ளார்.

