நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் சரித ரத்வத்தே கைது

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் சரித ரத்வத்தே கைது

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் பிரதமரின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

உரிய நடைமுறையை மீறி 2015 ஆம் ஆண்டு எந்தவொரு அவசியமும் இல்லாமல் அரச வணிக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 9 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை செலவு செய்து 50 தற்காலிக நெல் களஞ்சியங்களை இறக்குமதி செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக சரித ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )