வெல்லவாய பகுதியில் விபத்து ; இருவர் காயம்

வெல்லவாய பகுதியில் விபத்து ; இருவர் காயம்

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில், யாலபோவ டிப்போவிற்கு எதிரே இன்று (08) லொறி ஒன்றும், மோட்டார் வாகனம் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்து நிலையில் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )