
நிமல் லான்சாவுக்கு பிணை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல இன்று (08) அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில் நிமல் லான்சாவை தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் நிமல் லான்சா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

