
சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு
சுங்கத்துறை ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ. 236 பில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
அதே மாதத்திற்கான வருவாய் இலக்கு ரூ. 181.27 பில்லியன் என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அது கணிசமாக மீறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் சுங்கத்துறை ரூ. 919 பில்லியனுக்கும் அதிகமான மொத்த வருவாயை ஈட்டியுள்ளதாகவும் சுங்கத்துறை அறிவித்துள்ளது.
வருவாய் இலக்குகளை தொடர்ந்து மீறி சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
CATEGORIES Sri Lanka

