
தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தவெக ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ள நிலையில் மேலும் 4 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டசபையில்
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
எனினும், ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற எண்ணை எட்ட முடியாத நிலையில், 5 எம்எல்ஏக்களை பெற்றுள்ள காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தவெகவுக்கு கைகொடுத்தது.
ஆனால், இது மெஜாரிட்டிக்கு போதுமான எண்ணிக்கையில் இல்லாத நிலையில், இன்று (மே 8) நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் தவெகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்து கடிதம் கொடுத்துள்ளது.
இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டமும் நடைபெற்று வரும் நிலையில், அவர்களும் தவெகவுக்கு ஆதரவளிக்கும் எண்ணத்துடனே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

