
தெதுரு ஓயா, லுணுகம்வெஹேர மற்றும் ராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தெதுரு ஓயா, லுணுகம்வெஹேர மற்றும் ராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளை இன்று (9) முற்பகல் முதல் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெதுரு ஓயா நீர்த்தேக்கம்: 4 வான்கதவுகள் தலா 3 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன.
இதன்படி வினாடிக்கு 8,400 கன அடி நீர் தெதுரு ஓயாவிற்கு திறந்து விடப்படுகிறது.
லுணுகம்வெஹேர நீர்த்தேக்கத்தில் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதில் 2 கதவுகள் தலா 4 அடி வீதமும், ஏனைய 4 கதவுகள் தலா 8 அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் வினாடிக்கு 2,915 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் கிரிந்தி ஓயாவைப் பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதில் 4 வான்கதவுகள் தலா 2 அடி வீதமும், ஏனைய 2 கதவுகள் தலா 3 அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வினாடிக்கு 4,542 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

