2026 ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் இடாப்பு பெயர்ப் பட்டியல் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்க ஜூன் 5 வரை பொதுமக்களுக்கு சந்தர்ப்பம்

2026 ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் இடாப்பு பெயர்ப் பட்டியல் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்க ஜூன் 5 வரை பொதுமக்களுக்கு சந்தர்ப்பம்

2026 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு தொடர்பான உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 2026 ஜூன் 5 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் இடாப்பு தற்போது பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் தங்களது பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை பின்வரும் இடங்களில் சரிபார்க்க முடியும்:
மாவட்ட தேர்தல் அலுவலகங்கள்.
கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளம்.

வாக்காளர் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள், பெயர்கள் விடுபட்டமை அல்லது தகுதியற்ற பெயர்கள் தொடர்பான ஆட்சேபனைகளை ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )