சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

மே மாதத்தின் முதல் 10 நாட்களில் 46,606 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகார சபை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இக்காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 18,533 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்த வருகையாளர்களில் சுமார் 40 சதவீதமாகும்.

மேலும், சீனாவிலிருந்து 3,472 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,517 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,441 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் மே 10ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொத்தமாக 922,883 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அவர்களில், இந்தியாவிலிருந்து 208,451 பேரும், ரஷ்யாவிலிருந்து 74,628 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 91,362 பேரும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )