நாடாளுமன்ற உறுப்பினர்களின் பல்வேறு தபால் தேவைகளுக்காக இரண்டு புதிய முத்திரைகள் வெளியீடு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பல்வேறு தபால் தேவைகளுக்காக இரண்டு புதிய முத்திரைகள் வெளியீடு

நாடாளுமன்ற நூலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இந்த முத்திரைகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன.

20 ரூபாய் மற்றும் 70 ரூபாய் பெறுமதியுடைய இரண்டு புதிய முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை தபால் திணைக்களத்தின் முத்திரை பணியகத்தினால் இந்த முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பல்வேறு தபால் தேவைகளை இலகுவாகவும் முறையாகவும் நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்த விசேட முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )