எல்ல பிரதேசத்திற்கும் வரும் தம்பதிகளை அச்சுறுத்தி பாலியல் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவர் கைது

எல்ல பிரதேசத்திற்கும் வரும் தம்பதிகளை அச்சுறுத்தி பாலியல் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவர் கைது

எல்ல சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் இளம் காதலர்களை அச்சுறுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஹாலி-எல பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளம் தம்பதியை அச்சுறுத்தி, யுவதியை காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமை

மற்றொரு தம்பதியிடமிருந்து சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைப் பறித்துச் சென்றமை.
சுற்றுலா வந்த ஏனைய பல தம்பதிகளிடமிருந்து கைபேசிகள் மற்றும் பல்வேறு சொத்துக்களைக் கொள்ளையிட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )