அரசாங்கத்தின் ஊழல்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான கூட்டு எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது

அரசாங்கத்தின் ஊழல்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான கூட்டு எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது

கூட்டு எதிர்க்கட்சியின் பங்கேற்புடன் கூடிய கலந்துரையாடல் ஒன்று இன்று (16) கொழும்பு மலபார பகுதியில் நடைபெற்றது.

அரசாங்கத்தின் ஊழல்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் கருத்தரங்குத் தொடரின் மூன்றாவது கருத்தரங்கு வரும் 24ஆம் திகதி ஜா-எல பகுதியில் நடத்தப்படவுள்ளதுடன், அது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

பல மணித்தியாலங்கள் நீடித்த இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன,தெரிவித்தார்.

“கூட்டு எதிர்க்கட்சியினால் 24ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் கருத்தரங்குத் தொடரின் 3ஆவது கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்துக் கட்சிகளும் இணைந்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தினோம். எதிர்க்கட்சி எல்லா இடங்களிலும் இருக்கின்றது, அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தேவையான நேரத்தில் அனைவரும் ஒன்றிணைவார்கள். தற்போது எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் கட்சிகள், தத்தமது கட்சிகளைப் பலப்படுத்தும் பணிகளையே செய்து வருகின்றன. தேர்தல் ஒன்று வரும்போது, நாட்டின் தேவைக்காகப் பொறுப்புள்ள கட்சியாக அந்தப் பொறுப்பை நாங்கள் நிறைவேற்றுவோம்.” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )