பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும்மல்வானே வீட்டிற்குள் நுழைந்த பலக்லைக்கழக மாணவர்களை வெளியேற்றக்கோரி முறைப்பாடு

பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும்மல்வானே வீட்டிற்குள் நுழைந்த பலக்லைக்கழக மாணவர்களை வெளியேற்றக்கோரி முறைப்பாடு

கம்பஹா – மல்வானே பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒரு தரப்பினர் சட்டவிரோதமாக நுழைந்து அதனைத் தம்வசப்படுத்தியுள்ளமைக்கு எதிராக, தொம்பே பிரதேச செயலாளரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிக்குள் சட்டவிரோதமாக நுழைந்தமை தொடர்பில், சம்பந்தப்பட்ட குழுவினருக்கு எதிராக தொம்பே பொலிஸ் நிலையத்தில் பிரதேச செயலாளர் இந்த முறைப்பாட்டை சமர்ப்பிதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளியேற்றக்கோரி முறைப்பாடு

Set featured imageAdd an excerpt…

உரிமையாளர் எவருமற்ற மல்வானேயில் அமைந்துள்ள இந்த வீட்டையும் காணியையும் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு வழங்குமாறு கோரி, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த குழுவினர் கடந்த 14ஆம் திகதி முதல் அங்கு தங்கியிருந்து போராட்ட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்திருந்தனர்.

இதேவேளை, இந்த நடவடிக்கைக்கு எதிராக ‘நவ ஜனதா பெரமுன’ கட்சியும் இன்று (16) தொம்பே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்ததுடன், இதன்போது அக்கட்சியின் பிரதித் தலைவர் உபதிஸ்ஸ குமாரதுங்க ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்:

இந்த புதிய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பது ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) பகடைக்காயாகும்.

உங்களுக்கு மாணவப் போராட்டங்கள் பற்றித் தெரியாவிட்டால் ஒரு கதிரையை எடுத்துக்கொண்டு வாருங்கள், நாங்கள் கற்றுத் தருகிறோம் என மாணவர் தலைவர்களுக்குக் கூற விரும்புகிறேன், . இங்கிருந்து களனிப் பல்கலைக்கழகத்திற்கு 24 கிலோமீற்றரும், யக்கல ஆயுர்வேத பல்கலைக்கழகத்திற்கு 22 கிலோமீற்றரும் தூரமாகும். இதனைப் பல்கலைக்கழகத்திற்கு ஒப்படைக்குமாறு மாணவர்கள் எவ்வாறு கூற முடியும்? பல்கலைக்கழக நிர்வாகமே மாணவர் விடுதி ஒன்றை முறையாகப் பாதுகாக்க வேண்டும் .
கடந்த தித்வா சூறாவளியின் போது இந்த கட்டடம் 50 அடி வரை நீரில் மூழ்கியது. மேல் மாடி மாத்திரமே எஞ்சியிருந்தது. ஜனதா விமுக்தி பெரமுனவின் இந்த திட்டங்களால் ஏமாற வேண்டாம் என மாணவர்களிடமும் கேட்டுக்கொள்கிறோம். இதற்கு முறைப்பாடுகள் இல்லை என பொலிஸாரால் கூற முடியாது. பிரதேச செயலாளர் முறைப்பாடு செய்துள்ளார், ஒரு அரசியல் கட்சி என்ற ரீதியில் நாமும் வந்து முறைப்பாடு செய்துள்ளோம். தற்போது முறைப்பாடு விசாரணை செய்யப்பட்டுள்ளதுடன், மிக விரைவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்த மாணவர்கள் அங்கிருந்து அகற்றப்படுவார்கள் என நம்புகிறோம்.”
என ‘நவ ஜனதா பெரமுன கட்சியின் பிரதித் தலைவர் உபதிஸ்ஸ குமாரதுங்க தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )