அனர்த்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை5,000-ஐக் கடந்தது

அனர்த்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை5,000-ஐக் கடந்தது

நாட்டின் பல மாவட்டங்களைப் பாதித்துள்ள அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 5,000-ஐத் தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதுவரை 1,574 குடும்பங்களைச் சேர்ந்த 5,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

அவர்களில் 162 பேர் தற்போது 05 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

14 மாவட்டங்களில் உள்ள 65 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்கள் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
192 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

இதேவேளை அனர்த்ததால் 2 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )