மின்சாரம் தாக்கி வயோதிப பெண் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி வயோதிப பெண் உயிரிழப்பு

கொடவெஹெர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகொல்ல பகுதியில் நேற்று (16) மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பலுகொல்ல – கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீர் மோட்டார் இயந்திரத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டிருந்த வயரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடவெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )