
காங்கோவில் மீண்டும் தீவிரமடைந்த எபோலா பரவல் ; பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு
ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசுவில் கொடிய எபோலா வைரஸ் நோய் மீண்டும் அதிவேகமாகப் பரவி வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இதூரி மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக எபோலா தொற்று வேகமாகப் பரவி வருகின்றது.
இந்த நோய்த் தாக்கத்தால் இதுவரை 65 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது மேலும் 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம், எபோலா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
எபோலா பரவலைக் கட்டுப்படுத்த அவசர சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
CATEGORIES World News

