ஆயிரக்கணக்கானோர் டெங்குவால் பாதிப்பு ; சுகாதார பிரிவு எச்சரிக்கை

ஆயிரக்கணக்கானோர் டெங்குவால் பாதிப்பு ; சுகாதார பிரிவு எச்சரிக்கை

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 28,713 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு தொற்றினால் இதுவரை 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் மருத்துவர் பிரஷீலா சமரவீர இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார்.

டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையை கருத்தில் கொண்டு, நுளம்புகள் பெருகும் இடங்களை உடனடியாக அகற்றுவதுடன், சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரித்து டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )