தெருநாய் கடித்து 18 பேர் காயம்

தெருநாய் கடித்து 18 பேர் காயம்

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் தெருநாய் கடித்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட 18 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெருநாய்களின் அதிகரித்த அச்சுறுத்தலால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 2 இலட்சம் பேரை தெருநாய்கள் கடித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் தெருநாய்களை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்துவதுடன், அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )