
மனித பாவனைக்கு தகுதியற்ற உணவு விற்பனை ; மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலுக்கு சீல்
மட்டக்களப்புவில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றை இரண்டு வார காலத்திற்கு மூடிவைத்து சீல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (16) உத்தரவிட்டுள்ளது.
மனித பாவனைக்கு தகுதியற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனையின் பேரிலும், சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலின் கீழும் பொது சுகாதார பரிசோதகர்கள் ஹோட்டலை பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தனர்.
அதன்போது பல சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த ஹோட்டலுக்கு இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் நீதிமன்றத்தின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

