உரிமம் இன்றி எரிபொருள் கையிருப்பு ; இருவர் கைது

உரிமம் இன்றி எரிபொருள் கையிருப்பு ; இருவர் கைது

தம்பலகமுவ – மொல்லிப்போத்தானா பகுதியில் உரிமம் இன்றி எரிபொருள் கையிருப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்களிடமிருந்து 2,045 லிட்டர் டீசல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கைதானவர்கள் 41 மற்றும் 61 வயதுடையவர்களாக இருந்து, அவர்கள் முறையே திருகோணமலை மற்றும் தம்பலகமுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தம்பலகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )