
சீனாவில் நிலநடுக்கம்
சீனாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள குவாங்க்சி மாகாணத்தின் லியுனான் மாவட்டம், லியுசோயு நகரில் இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
திடீர் அதிர்வால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்து சீன அதிகாரிகளால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
CATEGORIES China

