நாடளாவிய ரீதியில் பொலிஸார் சுற்றிவளைப்பு : 641 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியில் பொலிஸார் சுற்றிவளைப்பு : 641 சந்தேக நபர்கள் கைது

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (17) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 641 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், 27,474 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 10 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 315 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 169 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 142 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 115 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )