லெபனான் எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம் : பொதுமக்களை எச்சரித்த இஸ்ரேல்

லெபனான் எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம் : பொதுமக்களை எச்சரித்த இஸ்ரேல்

தெற்கு லெபனானில் உள்ள மூன்று கிராமங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹரூஃப் (Harouf) , போர்ஜ் எல் ஷ்மாலி (Borj El Chmali) மற்றும் டீபால்(Debaal) ஆகிய கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக இஸ்ரேல் ராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனால், குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான திறந்த வெளிப்பகுதிகளுக்கு உடனடியாக இடம்பெயருமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைப் பகுதிகளில் அண்மைக் காலமாக பதற்றநிலை நீடித்து வரும் நிலையில், இந்த புதிய எச்சரிக்கை அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )