
கொழும்பிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் உள்ள சிற்றுண்டிச்சாலை ஊடாக ஆரோக்யமான உள்நாட்டு உணவை வழங்கும் திட்டம்
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சத்தான, ஆரோக்கியமான மற்றும் உள்நாட்டு உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ‘உணவுக் கொள்கையை’ அறிமுகப்படுத்த கொழும்பு மாநகர சபை ஒருமனதாகத் தீர்மானித்துள்ளது.
சமீபத்திய சபைக் கூட்டத்தொடரில் இந்த உணவுக் கொள்கை விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
மேலும், இப்பிரதேசத்தின் பொது சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவ அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் இந்த உணவுக் கொள்கையைச் செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவுக் கொள்கையை அறிமுகப்படுத்தும் மாநகர சபை, பாடசாலை மாணவர்களிடையே பொதுவாகக் காணப்படும் உடல் பருமன் போன்ற தொற்றா நோய்கள் வேகமாகப் பரவுவதைக் கருத்தில் கொண்டுள்ளது.
சிற்றுண்டிகள் மற்றும் இனிப்புப் பானங்களுக்குப் பதிலாக உள்ளூர் உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கவும் மாநகரசபை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

