தென் கொரியா எல்லையை “தகர்க்க முடியாத கோட்டையாக” மாற்ற உத்தரவு

தென் கொரியா எல்லையை “தகர்க்க முடியாத கோட்டையாக” மாற்ற உத்தரவு

கொரியப் போர் கடந்த 1953 ஆம் ஆண்டு தற்காலிகமாக நிறைவடைந்திருந்தாலும், சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் வடகொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் இன்னும் போர் நிலையிலேயே உள்ளன.

இந் நிலையில், தென் கொரியாவை தனது முதன்மை எதிரியாக அறிவித்துள்ள வடகொரியா, கடந்த மார்ச் மாதம் முதல் எல்லைப் பகுதிகளில் மிகப்பெரிய பாதுகாப்புச் சுவர்களை அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் தலைமையில் அவசர ராணுவத் தளபதிகள் கூட்டம் நடைபெற்றுள்ளது.

2011 ஆம் ஆண்டு அவர் ஆட்சிப் பொறுப்பேற்றதன் பின்னர் இடம்பெற்ற முதல் கூட்டு ராணுவ ஆலோசனைக் கூட்டம் இதுவாகக் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில், தென் கொரியா எல்லையை யாரும் ஊடுருவ முடியாத “தகர்க்க முடியாத கோட்டையாக” மாற்ற வேண்டும் என கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார்.

வடகொரியாவின் இந்த நடவடிக்கைகள் காரணமாக, கொரிய தீபகற்ப எல்லைப் பகுதிகளில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )