இபோலா தொற்றால் உயிரிழப்புகள் 100 ஆக உயர்வு – கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

இபோலா தொற்றால் உயிரிழப்புகள் 100 ஆக உயர்வு – கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

கொங்கோவில் பரவி வரும் இபோலா (Ebola) தொற்றுநோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

அந்நாட்டில் இதுவரை 390 க்கும் மேற்பட்ட இபோலா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில், பொதுச் சுகாதாரத்தைப் பேணுவதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்நாட்டு அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ இல்லாத நிலையில், இபோலா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு அந்நாட்டின் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இபோலா வைரஸ் பரவலின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை உலக சுகாதார நிறுவனம் (WHO) அவசர சுகாதார நிலையை பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )