
தங்கத்தின் விலையில் மாற்றமா ?
நேற்று (19) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 393,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று (20) இதுவரை தங்க விலையில் எந்த மாற்றமும் பதிவாகவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சந்தை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 393,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 361,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 49,125 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,188 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

